நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பொட்டுக்கடலை சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பண்டிகை காலங்களில் மாலை வேளையில் நிச்சயம் பலரது வீடுகளில் போண்டா, வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். அப்படி செய்யும் போது அதற்கு சைடு டிஷ்ஷாக சட்னியை பலர் விரும்புவர். இதுவரை நீங்கள் தேங்காய் சட்னி செய்திருப்பீர்கள். ஆனால் பொட்டுக்கடலை சட்னி வடையுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னி தேங்காய் சட்னியை போன்ற செய்முறையைக் கொண்டது.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் – 1 கப்
* பொட்டுக்கடலை – 1/2 கப்
* பச்சை மிளகாய் – 2
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.
இந்த பதிவின் மூலமாக பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பொட்டுக்கடலை சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…