Categories: சைவம்

Potato Lollipop Recipe | மொறுமொறுப்பான… உருளைக்கிழங்கு லாலிபாப்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு இன்று மாலை உருளைக்கிழங்கு லாலிபாப் செய்து கொடுங்கள். உருளைக்கிழங்கு லாலிபாப் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ்.

இப்போது அந்த உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு – 1 கப் (வேக வைத்து துருவியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மைதா – 1 டேபிள் ஸ்பூன்

* பிரட் தூள் – 1 கப்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* சாட் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

பிரட்டுவதற்கு…

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சிறிது

* பிரட் தூள் – 1/4 கப்

* டூத் பிக்ஸ்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சாட் மசாலா, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மைதா, 1 கப் பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு சிறிய பௌலில் மைதா, உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் ஒரு தட்டில் பிரட் தூளை போட்டுக் கொள்ளுங்கள்.

* அதன் பின் உருட்டி வைத்துள்ள உருண்டையை மைதாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

* எண்ணெய் சூடானதும், உருட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

* இறுதியில் டூத் பிக்கை ஒவ்வொரு உருண்டையிலும் சொருகினால், உருளைக்கிழங்கு லாலிபாப் தயார்.

இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… உருளைக்கிழங்கு லாலிபாப் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago