சைவம்

Pizza Dosa Recipe In Tamil | Pizza dosa recipe : பிட்சா தோசை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Pizza dosa recipe : பிட்சா தோசை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் குழந்தைகள் அடிக்கடி பிட்சா கேட்கிறார்களா? பொதுவாக பிட்சா சுவையான உணவாக இருந்தாலும், ஆரோக்கியமற்றது. ஆனால் இந்த பிட்சாவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யலாம். அதுவும் தோசை மாவைக் கொண்டு ஆரோக்கியமான பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். இந்த பிட்சா தோசை உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – 1 கப்

* குடைமிளகாய் – 1/4 கப் (நீளமாக கீறியது)

* வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1/4 கப்

* பிட்சா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

* சீஸ் – 1/4 கப் (துருவியது)

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1 சிட்டிகை

* ஆரிகனோ – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், 2 கரண்டி தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி, அதைப் பரப்பாமல், அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து குறைவான தீயில் சிறிது நேரம் தோசையை வேக வைக்க வேண்டும்.

* பின்பு தோசையின் மேல் 1 டேபிள் ஸ்பூன் பிட்சா சாஸை பரப்பி, அதன் மேல் வெங்காயம், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் தூவி, இறுதியாக துருவிய சீஸை பரப்பி விட்டு ஒரு நிமிடம் மூடி வைத்து, சீஸ் உருக வேக வைக்க வேண்டும்.

* பின் மூடியைத் திறந்து, அந்த தோசையை அப்படியே ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ், ஆரிகனோ தூவினா, பிட்சா தோசை தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக Pizza dosa recipe : பிட்சா தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Pizza dosa recipe : பிட்சா தோசை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment