அசைவம்

Pepper Chicken Gravy Recipe | காரசாரமான… பெப்பர் சிக்கன் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காரசாரமான…(Pepper Chicken Gravy Recipe) பெப்பர் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

Pepper Chicken Gravy Recipe

இரவு உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு சிக்கன் ரெசிபியை சைடு டிஷ்ஷாக செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று காரமான சிக்கன் ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு பெப்பர் சிக்கன் கிரேவி தான் பொருத்தமாக இருக்கும். இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக இந்த பெப்பர் சிக்கன் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்குமே அட்டகாசமாக இருக்கும்.

அதோடு இது பேச்சுலர்களும் முயற்சிக்கும் வகையில் எளிமையான செய்முறைக் கொண்டது. கீழே பெப்பர் சிக்கன் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 500 கிராம்

* தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

* பிரியாணி இலை – 1

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

* கொத்தமல்லி – சிறிது

வறுத்து அரைப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, சிக்கனைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலாப் பொருட்களை சேர்த்து வறுத்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கி, ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அதன் பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

* பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி விடவும்.

* இப்போது வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் பெப்பர் சிக்கன் கிரேவி தயார்.

இந்த பதிவின் மூலமாக காரசாரமான… பெப்பர் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காரசாரமான… பெப்பர் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment