Categories: அசைவம்

Pepper Chicken Dry Recipe In Tamil | பெப்பர் சிக்கன் ட்ரை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பெப்பர் சிக்கன் ட்ரை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இந்த வார இறுதியில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு ஸ்பெஷல் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பெப்பர் சிக்கன் ட்ரை செய்யுங்கள். இந்த பெப்பர் சிக்கன் ட்ரை ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த பெப்பர் சிக்கன் ட்ரை ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை பேச்சுலர்களும் முயற்சி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது)

* கறிவேப்பிலை – சிறிது

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5-10 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 30 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். ( சிக்கன் அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளற வேண்டும்.)

* சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து உயர் தீயில் வைத்து மசாலா நன்கு ட்ரையாகும் வரை வதக்கி, மேலே மிளகுத் தூளை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியாக மேலே எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பெப்பர் சிக்கன் ட்ரை தயார்.

இந்த பதிவின் மூலமாக பெப்பர் சிக்கன் ட்ரை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பெப்பர் சிக்கன் ட்ரை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago