நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Easy Pasta Salad : பாஸ்தா சாலட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் பசிக்குதுன்னு சொல்றாங்களா? அவங்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாலட்டை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு உங்கள் வீட்டில் பாஸ்தா இருந்தால், அதைக் கொண்டு பாஸ்தா சாலட் செய்து கொடுங்கள். இந்த பாஸ்தா சாலட் செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா – 1 1/2 கப்
* தண்ணீர் – 4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – சில துளிகள்
சாலட் டிரஸ்ஸிங்…
* எண்ணெய் – 1/4 கப்
* வினிகர் – 1 டீஸ்பூன்
* மயோனைஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* உலர்ந்த கற்பூரவள்ளி – 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
* பூண்டு பொடி – 1 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
காய்கறிகள்…
* வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து, அதன்பின் பாஸ்தாவை சேர்த்து 10 நிமிடம் வேக வையுங்கள்.
* பாஸ்தா நன்கு வெந்துவிட்டதா என்று அவ்வப்போது சோதித்துக் கொள்ளுங்கள். பாஸ்தா நன்கு வெந்துவிட்டால், ஸ்பூன் கொண்டு வெட்டும் போது பாஸ்தா எளிதில் துண்டாகும்.
* பின் அடுப்பை அணைத்து நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை பாஸ்தாவை அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் ஒரு பெரிய பௌலில் ஆலிவ் அயில் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் உலர்ந்த கற்பூரவள்ளி, சில்லி ப்ளேக்ஸ், பூண்டு பொடி, மிளகுத் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறினால், பாஸ்தா சாலட் தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக Easy Pasta Salad : பாஸ்தா சாலட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Easy Pasta Salad : பாஸ்தா சாலட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…