செய்திகள்

ரயில் கட்டணம் கடும் உயர்வு: பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு

ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அரசு நேற்று அதிரடியாக உயர்த்தியது (rail fares increase). அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ‘கஜானா காலியாகி விட்டதால் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டே இவை மேற்கொள்ளப்படும். இதனால் என் மீதான அன்பு கூட மக்களுக்கு குறையலாம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் கூறியிருந்தார். அப்போதே பெட்ரோல் விலை உயரலாம், வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம், விலைவாசி உயரலாம் எனவும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டிலேயே இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதால் செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை.

எனவே, பயணிகள் மற்றம் சரக்கு கட்டணங்களை உயர்த்தும்படி ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி ரயில் கட்டணங்களை உயர்த்துவதற்கான அறிவிப்பு, மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 16ம் தேதி வெளியானது. ஆனால், உடனடியாக அது நிறுத்தி வைக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்கும் அரசின் முடிவுக்கு இதை விட்டு விடுவதாக அப்போதைய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.அதன்படி, ரயில் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்புகள் புதிய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், ரயில் கட்டணத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் நேற்று திடீரென வெளியிட்டது.இந்த புதிய கட்டணம் நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. பின்னர், புதிய கட்டணத்தை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்வதற்கு வசதியாகவும், கட்டணங்களை கணக்கிட்டு முடிவு செய்வதற்காகவும், டிக்கெட் புக்கிங் சாப்ட்வேரில் மாற்றங்கள் செய்வதற்காகவும் அவகாசம் அளிக்கவும், வரும் 25ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

ரயில் கட்டணம்

இதன்படி, அனைத்து வகுப்புளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இதில், அனைத்து வகுப்புகளுக்கான கட்டணத்தில் 10 சதவீதமும், எரிபொருள் விலை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 4.2 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. மேலும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வுகள் மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.8,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும்.புதிய கட்டண உயர்வு குறித்து ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட் பரிந்துரைகளை பின்பற்றியே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி உள்ள நிலையில் இதிலிருந்து நாங்கள் மாறிச்செல்ல முடியாது. எனவே, ரயில்வே கட்டணங்களை உயர்த்தும் கடந்த அரசின் முடிவை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டு உள்ளேன்’’ என்றார்.இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கட்டண உயர்வை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி உள்ளன.

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

3 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

3 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

3 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

3 years ago