சைவம்

Paneer Masala Recipe | சிம்பிளான… பன்னீர் மசாலா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிம்பிளான… பன்னீர் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று நாம் காணவிருப்பது பன்னீர் மசாலா ரெசிபியைத் தான். இந்த பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதோடு பன்னீரை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான கால்சியம், புரோட்டீன் போன்றவை அதிகம் உள்ளன. இத்தகைய பன்னீர் அடிக்கடி உணவில் சேர்ப்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

இப்போது பன்னீர் மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* கிராம்பு – 2

* ஏலக்காய் – 2

* பிரியாணி இலை – 1

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* மல்லி தூள் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 1/2 கப்

* உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.

* பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் தக்காளி சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 7-8 நிமிடம் வேக வைக்கவும்.

* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அதில் தயிர் சேர்த்து கிளறி, கிரேவி அதிகம் வேண்டுமானால் 1/2 கப் நீரையும் சேர்த்து, சுவைப்கேற்ப உப்பு தூவி கிளறிவிட்டு வேக வைக்கவும்.

* இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் மசாலா ரெடி!

இந்த பதிவின் மூலமாக சிம்பிளான… பன்னீர் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிம்பிளான… பன்னீர் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment