Categories: சைவம்

Paneer Cashew Curry Recipe | ருசியான… பன்னீர் முந்திரி கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… பன்னீர் முந்திரி கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பால் பொருட்களில் ஒன்றான பன்னீரைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று என்றால் அது பன்னீர் பட்டர் மசாலா தான். ஆனால் இந்த பன்னீரை பட்டர் மசாலாவை விட அற்புதமான ஒரு பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் பன்னீர் முந்திரி கிரேவி. இது சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கவும்)

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* காய்ந்த வெந்தய கீரை இலைகள் – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* தக்காளி – 4 (நறுக்கியது)

* முந்திரி – 15

* இஞ்சி – 2 இன்ச்

* வரமிளகாய் – 4-5

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.

* பொருட்கள் நன்கு வெந்ததும், அதை இறக்கி, குளிர வைத்து, பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருஞ்சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.

* பின்பு அரைத்த மசாலாவை ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

* கிரேவி நன்கு கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை இலைகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் முந்திரி கிரேவி தயார்!

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக ருசியான… பன்னீர் முந்திரி கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… பன்னீர் முந்திரி கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago