நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… பன்னீர் 65 ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
நீங்கள் பன்னீர் பிரியரா?
கீழே பன்னீர் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு…
* பன்னீர் – 200 கிராம்
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
மாவிற்கு…
* மைதா – 3 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* சமையல் சோடா – 1 சிட்டிகை
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு பௌலில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள சில பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.
குறிப்பு:
* பன்னீர் துண்டுகளானது மசாலாவில் நன்கு ஊறி இருக்க வேண்டும்.
* அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.
*
* சமையல் சோடா சேர்க்க தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அது தான் நல்ல அமைப்பைத் தரும். சமையல் சோடா சேர்க்காமல் செய்தால், பன்னீர் 65 சற்று கடினமாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… பன்னீர் 65 எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… பன்னீர் 65 ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .