சைவம்

Pachai Payaru Kadayal Recipe in Tamil | பச்சை பயறு கடையல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பச்சை பயறு கடையல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

புரோட்டீன் அதிகம் நிறைந்தது தான் பச்சை பயறு. உணவில் பச்சை பயறை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு பயறை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பச்சை பயறைக் கொண்டு கடையல் செய்தால், அது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு – 1/2 கப்

* சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)

* நாட்டு தக்காளி – 1 (நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 2 1/2 கப்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பூண்டு – 2 பல்

* கறிவேப்பிலை – சிறிது

* மிளகு – 1/2 டீஸ்பூன்

மசாலா பொடிகள்…

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறைப் போட்டு குறைவான தீயில் குறைந்தது 3-5 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் நீரை ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பச்சை பயறை நன்கு மசிக்க வேண்டும்.

* இறுதியாக அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பச்சை பயறு கடையல் தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக பச்சை பயறு கடையல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பச்சை பயறு கடையல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment