நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… பால் பொங்கல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. இந்த பொங்கல் பண்டிகையன்று நீங்கள் வித்தியாசமான ஒரு பொங்கலை செய்ய நினைத்தால், இந்த வருடம் பால் பொங்கலை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இந்த பால் பொங்கலை குக்கரிலேயே செய்யலாம். இந்த பால் பொங்கல் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது. அதேப் போல் இது அதிக நேரமும் எடுக்காது.
கீழே பால் பொங்கல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பிகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி – ஒரு கப்
* நெய் – 2 டீஸ்பூன்
* வெல்லம்/சர்க்கரை – 3/4 கப்
* பால் – 4 கப்
* முந்திரி – 20
* உலர் திராட்சை – 20
* ஏலக்காய் பொடி – ஒரு டீஸ்பூன்
* நெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி கிளறி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் உலர் திராட்சையைப் போட்டு, திராட்சை பலூன் போன்று வீங்கும் வரை வதக்கி இறக்கி, குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்ற வேண்டும்.
* இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.
குறிப்பு:
* பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.
* பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
* பால் பொங்கலை குக்கரிலும் செய்யலாம் அல்லது பாத்திரத்திலும் செய்யலாம்.
Image Courtesy: aromatic-cooking
இந்த பதிவின் மூலமாக ருசியான… பால் பொங்கல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… பால் பொங்கல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…