நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வெங்காய சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தேங்காய் சட்னி செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த வெங்காய சட்னி செய்வதற்கு தக்காளி, தேங்காய் என்று எதுவுமே தேவைப்படாது. மேலும் இந்த சட்னி வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் – 1 கப் (நறுக்கியது)
* பூண்டு – 1-2 பல் (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் – 2-3
* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* புளி – ஒரு சிறிய துண்டு
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் சேர்த்து சில நொடிகள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளி சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அரைத்ததை சேர்த்து குறைவான தீயில் வைத்து, வேண்டுமானால் சிறிது நீர் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: vegrecipesofindia
இந்த பதிவின் மூலமாக வெங்காய சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வெங்காய சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…