சைவம்

Onion Bajji Recipe In Tamil | வெங்காய பஜ்ஜி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வெங்காய பஜ்ஜி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 2 (வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.)

* கடலை மாவு – 1/2 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* ஓமம் – 1/4 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெங்காய பஜ்ஜி தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக வெங்காய பஜ்ஜி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வெங்காய பஜ்ஜி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment