Pattukottai police: பட்டுக்கோட்டை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமாக இருக்கிறது. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பழகன் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்தார். அதன்படி நகரின் முக்கிய வீதிகளில் 3 இடங்களில் பேருந்து நிறுத்தத்தை மாற்றினார்.
இந்த அதிரடி மாற்றங்களால் பட்டுக்கோட்டை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையின் இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் புதிய காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. அந்த காவல் உதவி மையத்தை தஞ்சை சரக காவல்துறை டி.ஐ.ஜி. லோகநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி (பொறுப்பு) சேகர், இன்ஸ்பெக்டர் அன்பழகன், பயிற்சி எஸ்.ஐ. ஜெகதீசன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு எஸ்.எஸ்.ஐ. சேகர், எஸ்.பி. தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. மேகநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் அன்பழகன் சில தினங்களுக்கு முன் ஹெல்மெட் அணிந்து வரும் வாகனஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கி வாகன ஓட்டிகளை உற்ச்சாகப்படுத்தி படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகம் குறைப்போம்… உயிர் காப்போம்…