நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நெத்திலி மாங்காய் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கீழே நெத்திலி மாங்காய் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெத்திலி மீன் – 500 கிராம்
* துருவிய தேங்காய் – 2 கப்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 6
* பச்சை மிளகாய் – 5
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* புளி – ஒரு எலுமிச்சை அளவு
* பச்சை மாங்காய் – 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் நெத்திலி மீனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மாங்காயை சேர்த்து வதக்கி, புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நெத்திலி மீன்களை சேர்த்து மென்மையாக கிளறி, மூடி வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான நெத்திலி மாங்காய் குழம்பு தயார்.
குறிப்பு:
* பச்சை மிளகாய்க்கு பதிலாக, வரமிளகாயை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
* பச்சை மாங்காய் இல்லாவிட்டால், சற்று புளியை அதிகமாக சேர்த்துக் கொண்டால் போதும்.
* இதில் நெத்திலி மீன் சேர்க்கப்பட்டுள்ளது. நெத்திலி மீன் இல்லாதவர்கள் வேறு எந்த மீனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவின் மூலமாக நெத்திலி மாங்காய் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நெத்திலி மாங்காய் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…