நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நவராத்திரி ஸ்பெஷல் பீட்ரூட் பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
நீங்கள் பாயாசப் பிரியரா? பாயாசத்தை அடிக்கடி செய்து சாப்பிடுவீர்களா? இதுவரை எத்தனையோ பாயாசத்தை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பீட்ரூட் பாயாசத்தை என்றாவது செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையென்றால், இந்த நவராத்திரிக்கு பீட்ரூட் பாயாசத்தை செய்து துர்கா தேவிக்கு படையுங்கள். பீட்ரூட் பாயாசம் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட.
தேவையான பொருட்கள்:
* பால் – 2 1/2 கப்
* நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உடைத்த முந்திரி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பீட்ரூட் – 1 கப் (துருவியது)
* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாலை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரையை முற்றிலும் உருக வைக்க வேண்டும். சர்க்கரை உருகியதும், குளிர வைத்துள்ள பாலை ஊற்றி கிளறி குறைவான தீயில் வைத்து 10-12 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பாயாசம் தயார்.
குறிப்பு:
* பீட்ரூட்டின் பச்சை வாசனை போகாமல் சர்க்கரையை சேர்த்துவிடாதீர்கள்.
* பாயாசத்தின் சுவை இன்னும் தூக்கலாக இருக்க வேண்டுமானால், இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக நவராத்திரி ஸ்பெஷல் பீட்ரூட் பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நவராத்திரி ஸ்பெஷல் பீட்ரூட் பாயாசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .