நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான… மட்டன் நெய் சோறு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
நாம் அனைவருமே நெய் சோறு சுவைத்திருப்போம். பொதுவாக நெய் சோறு செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவியைத் தொட்டுக் கொள்வோம். ஆனால் இந்த வார விடுமுறையில், சற்று வித்தியாசமான அதே சமயம் மட்டன் பிரியாணிக்கு இணையான சுவையைத் தரும் மட்டன் நெய் சோறு செய்து சுவைத்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.
மட்டன் நெய் சோறுக்கு சிறந்த சைடு டிஷ் என்றால் அது வெங்காய பச்சடி தான். இப்போது மட்டன் நெய் சோறு எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி – 2 கப்
* தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
* பிரியாணி இலை – 1
* ஏலக்காய் – 5
* கிராம்பு – 5
* பட்டை – 1 சிறு துண்டு
* சீரகம் – 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ – 1
* கல்பாசி – 2 துண்டு
* வெங்காயம் – 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் – 6-7 (நீளமாக கீறிக் கொள்ளவும்)
* தண்ணீர் – 2-3 கப்
* நெய் – 1/4 கப்
* முந்திரி – ஒரு கையளவு
* உலர் திராட்சை – சிறிது
ஊற வைப்பதற்கு…
* மட்டன் – 1/2 கிலோ
* தயிர் – 1/2 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* புதினா இலைகள் – 1 கப்
* எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்து நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின் மட்டனை சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்கவும். இப்போது குக்கரில் ஒரு கப் அளவு நீர் இருக்கும். அத்துடன் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு 5 நிமிடம் உயர் வெப்பநிலையில் நன்கு நீரைக் கொதிக்க விடவும். பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதை குக்கரில் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் நெய் சோறு தயார்.
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக சுவையான… மட்டன் நெய் சோறு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான… மட்டன் நெய் சோறு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…