சைவம்

Mushroom Soup Recipe In Tamil | காளான் சூப்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காளான் சூப் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் சூப்பை விரும்பி குடிப்பவரா? தினமும் உங்களின் உணவில் சூப் இருக்குமா?

தேவையான பொருட்கள்:

* காளான் – 200 கிராம்

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 2 பல்

* வெங்காயம் – 1/2

* பச்சை பட்டாணி – 1/4 கப்

* கார்ன் – 1/4 கப்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

க்ரீமிக்கு தேவையானவை…

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* பால் – 2 கப்

* உப்பு மற்றும் மிளகுத் தூள்

செய்முறை:

* முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் காளானை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். காளான் மென்மையானதும், பச்சை பட்டாணி, கார்ன் சேர்த்து நன்கு கிளறி, பின் மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து குறைவான தீயில் வைத்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக கிளற வேண்டும்.

* பிறகு பாலை ஊற்றி கெட்டியாக விட வேண்டும். பால் கெட்டியானதும், வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறி கொதிக்க விட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காளான் சூப் தயார்.

Image Courtesy: steffisrecipes

இந்த பதிவின் மூலமாக காளான் சூப் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காளான் சூப் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment