Categories: சைவம்

Moong Dal Tikki Recipe In Tamil | பாசிப்பருப்பு டிக்கி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு டிக்கி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் காரமாக ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையில் டிக்கி செய்யலாம். இந்த பாசிப்பருப்பு டிக்கி செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. அதோடு இந்த டிக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

கீழே பாசிப்பருப்பு டிக்கி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு – 1 கப்

* பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை பட்டாணி – 1/4 கப் (வேக வைத்து மசித்தது)

* பன்னீர் – 1/4 கப் (துருவியது)

* புதினா – சிறிது

* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

* மாங்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* சாட் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை குக்கரில் போட்டு, அதில் 1/2 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி, அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பெரிய பௌலில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு, குடைமிளகாய், பன்னீர், புதினா மற்றும் வேக வைத்துள்ள பாசிப் பருப்பை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதே பௌலில் சோள மாவு, சீரகப் பொடி, உப்பு, மாங்காய் தூள், மிளகுத் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டி, டிக்கி போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தட்டி வைத்துள்ள டிக்கிகளை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு டிக்கி தயார்.

குறிப்பு:

* மாங்காய் தூள் இல்லாதவர்கள், அதற்கு பதிலாக புளிப்பிற்கு எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக பாசிப்பருப்பு டிக்கி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பாசிப்பருப்பு டிக்கி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago