Categories: அசைவம்

Methi Chicken Kuzhambu Recipe In Tamil | மெத்தி சிக்கன் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மெத்தி சிக்கன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

சிக்கன் பிரியர்களே!
கீழே மெத்தி சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 3/4 கிலோ

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* மெத்தி இலைகள்/வெந்தய கீரை – 1 கப்

* பச்சை மிளகாய் – 4 (கீறியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* கறிவேப்பிலை – சிறிது

* கெட்டியான தேங்காய் பால் – 1/3 கப்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு…

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்

* தயிர் – 2 டீஸ்பூன்

* உப்பு – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 1/4 டீஸ்பூன்

* கிராம்பு – 2

* பட்டை – 1 இன்ச் துண்டு

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பின் வெந்தய கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 7-8 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், மெத்தி சிக்கன் குழம்பு தயார்.

குறிப்பு:

* நல்ல ப்ளேவர் கிடைக்க நற்பதமான வெந்தய கீரையைப் பயன்படுத்துங்கள். உலர்ந்த வெந்தய கீரையைப் பயன்படுத்த வேண்டாம். அது சுவை மற்றும ப்ளேவரை முற்றிலும் மாற்றிவிடும்.

* சிக்கனை இரவு தூங்கும் போதே மசாலாக்களை சேர்த்து பிரட்டி ஊற வைத்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.

* இந்த குழம்பில் தக்காளி சேர்க்கவில்லை. அதற்கு மாறாகத் தான் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்டுள்ளது.

* தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டாம். மேலும் எலுமிச்சை சாற்றினை குழம்பை அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு தான் சேர்க்க வேண்டும்.

* முக்கியமாக குழம்பை தயாரித்த பின், 2 மணிநேரம் கழித்து பரிமாறினால், மெத்தி சிக்கன் குழம்பு இன்னும் அற்புதமாக இருக்கும்.

Image Courtesy: naliniscooking

இந்த பதிவின் மூலமாக மெத்தி சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மெத்தி சிக்கன் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago