நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சத்தான… மசாலா பால் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்துவிட்டதா? தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், சூடாகவும், சத்தாகவும் குடிக்க பலருக்கும் ஆசை இருக்கும். நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், மசாலா பால் குடியுங்கள். இந்த மசாலா பால் நட்ஸ்கள் மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பானம் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி குடிக்குமாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பால் – 2 கப்
* சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1/2 இன்ச்
* கிராம்பு – 2
* ஏலக்காய் – 1
* முந்திரி – 6
* பாதாம் – 6
* பிஸ்தா – 8
* குங்குமப்பூ – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடம் வறுத்து இறக்கி, சிறிது குங்குமப்பூவை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* வறுத்த பொருட்களானது நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடாகி கொதிக்க ஆரம்பித்ததும், நெருப்பைக் குறைக்க வேண்டும்.
* பின் பாலில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த பொடியை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பாலின் மேல் சிறிது குங்குமப்பூ மற்றும் பொடித்த நட்ஸ் சிறிது தூவினால், சுவையான மற்றும் சத்தான மசாலா பால் தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக சத்தான… மசாலா பால் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சத்தான… மசாலா பால் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .