நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Mango-Lime Granita Recipe : மேங்கோ கிரனிட்டா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கோடையில் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்கள் விலைக்குறைவில் கிடைக்கும். அதோடு மாம்பழம் பலருக்கும் விருப்பமான ஓர் பழம். மாம்பழ பிரியர்கள் மாம்பழங்களை எந்த வடிவில் கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான டெசர்ட்டை சாப்பிட விரும்பினால், அதைக் கொண்டு மேங்கோ கிரனிட்டா செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த மாம்பழங்கள் – 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* சர்க்கரை – 1/2 கப்
* தண்ணீர் – 1/2 கப்
* எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாம்பழங்களை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சாஸ் பேனில் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் நீரை எடுத்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மாம்பழ கூழை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் 3-4 மணிநேரம் வைக்க வேண்டும்.
* பின் அதை வெளியே எடுத்து, முள்கரண்டியைக் கொண்டு கீறி விட்டு, பின் அதைப் பரிமாறினால், மேங்கோ கிரனிட்டா தயார்.
இந்த பதிவின் மூலமாக Mango-Lime Granita Recipe : மேங்கோ கிரனிட்டா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Mango-Lime Granita Recipe : மேங்கோ கிரனிட்டா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .