நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த காய்கறி. இத்தகைய வெண்டைக்காயைக் கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்யுங்கள். இது சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆனால் அற்புதமான சுவையைக் கொண்டது. குறிப்பாக இந்த சாம்பாரில் சற்று இனிப்புச் சுவையும் தெரியும்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் – 10 (சற்று நீள நீளமாக வெட்டவும்)
* துவரம் பருப்பு – 1 கப்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
* புளி – 1 நெல்லிக்காய் அளவு
* வெல்லம் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயை போட்டு, அதில் உள்ள பிசுபிசுப்பு நீங்கி, வெண்டைக்காய் ஓரளவு சுருங்கும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கினால், சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் தயார்.
குறிப்பு:
*
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…