நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மைதா போண்டா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா? வீட்டில் மைதா உள்ளதா? அப்படியானால் அந்த மைதா கொண்டு அற்புதமான சுவையில் ஒரு இனிப்பு போண்டா தயாரிக்கலாம். இந்த மைதா போண்டா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
ஏனெனில் கீழே மைதா போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா – ஒரு கப்
* சர்க்கரை – அரை கப்
* பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்
* பால் – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடி என அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* எண்ணெய் சூடானதும், அதில் போண்டா மாவை சிறிது சிறிதாக ஒரு ஸ்பூன் பயன்படுத்தி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மைதா போண்டா தயார்.
இந்த பதிவின் மூலமாக மைதா போண்டா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மைதா போண்டா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .