நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கீழே கொடுக்கப்பட்டுள்ள மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, பிரியாணிக்கும் அற்புதமாக இருக்கும். அதோடு இட்லி, தோசைக்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த மதுரை ஸ்டைல் மட்டன் சால்னாவின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் – 200 கிராம்
* துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* மிளகு – 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* பட்டை – 1/4 இன்ச்
* கல்பாசி 1/4 டீஸ்பூன்
* கிராம்பு – 2
* ஏலக்காய் – 2
* பிரியாணி இலை – 1
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் துவரம் பருப்பை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து 2 நிமிடம், தக்காளி நன்கு மென்மையாகி பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை சேர்த்து 2 நிமிடம் கிளறி, மட்டனின் நிறம் மாற ஆரம்பித்ததும், அதில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி, மீண்டும் 3-4நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி!
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…