நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான லெமன் சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சட்னி செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? இதுவரை நீங்கள் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, காரச்சட்னியை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் லெமன் சட்னி அல்லது எலுமிச்சை சட்னியை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், இன்று நீங்கள் லெமன் சட்னி செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* பூண்டு – 3 பல்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பெரிய எலுமிச்சையாக இருந்தால் ஒன்று போதும். இல்லாவிட்டால் 2 எலுமிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் பூண்டு பற்களை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு அதில் கடுகு சேர்த்து தாளித்து, தட்டி வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியில் சேர்த்து கலந்தால், சுவையான லெமன் சட்னி/எலுமிச்சை சட்னி தயார்.
குறிப்பு:
* காரத்திற்கு ஏற்ப
* சட்னி மிகவும் புளிப்பாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கேற்ப மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
* முக்கியமாக இந்த ரெசிபிக்கு நல்லெண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் இந்த ரெசிபியின் கார அளவைக் குறைத்து, சுவையைக் கூட்டுகிறது.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக லெமன் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி லெமன் சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .