Categories: சைவம்

Kung Pao Paneer Recipe In Tamil | குங் பாவ் பன்னீர்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குங் பாவ் பன்னீர் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் பன்னீர் பிரியரா? சைனீஸ் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று இந்தோ-சைனீஸ் ரெசிபியை நாம் பார்ப்போம். இந்த ரெசிபியின் பெயர் குங் பாவ் பன்னீர். இந்த பன்னீர் ரெசிபியில் பன்னீரை வறுத்து சாஸ் உடன் சேர்த்து செய்வோம். இந்த குங் பாவ் பன்னீர் ப்ளைன் ரைஸ் அல்லது சீசுவான் ரைஸ் உடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த குங் பாவ் பன்னீரை அப்படியே கூட சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வறுத்த வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 4-5

* சிவப்பு குடைமிளகாய் – 1/2 (மெல்லிய துண்டுகளாக நறுக்கியது)

* ஸ்பிரிங் ஆனியன் – ஒரு கைளயவு (பொடியாக நறுக்கியது)

பன்னீருக்கு…

* பன்னீர் – 200 கிராம்

* சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

சாஸ் தயாரிப்பதற்கு…

* வெஜிடேபிள் ஸ்டாக் – 1 கப் அல்லது 1 க்யூப்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

* வினிகர் – 1 டீஸ்பூன்

* சோள மாவு – 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வெஜிடேபிள் ஸ்டாக் க்யூப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி சிறிது நேரம் க்யூப் கரையும் வரை ஊற வையுங்கள்.

* பின் அதில் சோயா சாஸ், வினிகர், சிறிது சர்க்கரை, உப்பு, சோள மாவு சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சோயா சாஸ், உப்பு, சோள மாவு, சிறிது நீர் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து வறுத்து இறக்கி ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதே பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

* பின் அதில் வரமிளகாள், வேர்க்கடலை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்க வேண்டும்.

* அதன் பின் சிவப்பு குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை கிளறி, தயாரித்து வைத்துள்ள சாஸை ஊற்றி கிளறி, கொதிக்க வையுங்கள்.

* கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க வைத்து, மேலே ஸ்ப்ரிங் ஆனியனை தூவி நன்கு கிளறி இறக்கினால், குங் பாவ் பன்னீர் தயார்.

இந்த பதிவின் மூலமாக குங் பாவ் பன்னீர் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குங் பாவ் பன்னீர் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago