Categories: அசைவம்

Kongunadu Mutton Kulambu Recipe In Tamil | கொங்குநாடு மட்டன் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கொங்குநாடு மட்டன் குழம்பு ரெசிப்பி (Kongunadu Mutton Kulambu) செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுகள் தனித்துவமான சுவையுடன் இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால், செட்டிநாடு, கொங்குநாடு ஸ்டைல் உணவுகள் மிகவும் சூப்பராக இருக்கும். நீங்கள் இதுவரை கொங்குநாடு ரெசிபிக்களை சுவைத்ததில்லையா?

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 1/2 கிலோ

சிவப்பு மசாலா செய்வற்கு…

* சின்ன வெங்காயம் – 2 1/2 கப்

* வரமிளகாய் – 7

* சோம்பு – 1 டீஸ்பூன்

* மல்லி – 2 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கசகசா – 1/4 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* பூண்டு – 6 பல்

* இஞ்சி – 1 சிறிய துண்டு (விருப்பமிருந்தால்)

* எண்ணெய் – 3 டீஸ்பூன்

வெள்ளை மசாலா செய்வதற்கு…

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்

* பூண்டு – 2 பல்

* தண்ணீர் – அரைப்பதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 4 ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தேங்காய் – 3 ஸ்பூன் (துண்டுகளாக்கப்பட்டது)

* முதலில் சிவப்பு மசாலா தயாரிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சோம்பு, மல்லி விதைகள், சீரகம், கசகசா, பட்டை, வரமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் வேண்டுமானால் இஞ்சியை சேர்த்து சில நிமிடங்கள் குறைவான தீயில் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்து தனியாகக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் கழுவிய மட்டனை சேர்த்து உப்பு தூவி, மட்டன் நிறம் மாறி பெரிதாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள சிவப்பு மசாலா விழுதை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

* அதன்பின் அதில் மட்டன் மூழ்கும் வரையான தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடி வைத்து 1/2 மணிநேரம் நன்கு மட்டனை வேக வைக்க வேண்டும். (அவ்வப்போது மூடியைத் திறந்து மட்டனில் நீர் உள்ளதாக என்பதை பார்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்)

* அதற்குள் வெள்ளை மசாலாவை தயாரித்துக் கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பூண்டு, பொட்டுக்கடலை, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* மட்டன் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வெள்ளை மசாலா மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பும் சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொங்குநாடு மட்டன் மசாலா தயார்.

இந்த பதிவின் மூலமாக கொங்குநாடு மட்டன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கொங்குநாடு மட்டன் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago