நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Kerala Style Chicken Curry Recipe : கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தமிழகத்தை அடுத்து கேரளா ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக கேரளா ஸ்டைல் அசைவ உணவுகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். நீங்கள் கேரளா ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அதுவும் சிக்கன் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு…
* சிக்கன் – 750 கிராம்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* சீரகம் – 2 டீஸ்பூன்
* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1 பெரிய துண்டு
* ஏலக்காய் – 6
* கிராம்பு – 6
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு…
* எண்ணெய் – 1/4 கப்
* வெங்காயம் – 3 (நறுக்கியது)
* தக்காளி – 4 (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* தேங்காய் விழுது – 1/2 கப்
* கொத்தமல்லி – ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து உப்பு சிறிது தூவி மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.
* பின் அதை குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த பட்டை மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். அதன் பின் அரைத்த வெங்காய தக்காளி மசாலாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 30-35 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 15 நிமிடம் வேக வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
இந்த பதிவின் மூலமாக Kerala Style Chicken Curry Recipe : கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Kerala Style Chicken Curry Recipe : கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .