நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பாயாசம் அனைவருக்குமே பிடித்த ஒன்று. பண்டிகை அல்லது விழாக் காலங்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் ரெசிபியாக பாயாசம் இருக்கும். அதே சமயம் மாலை வேளையில் கூட சிலர் பாயாசத்தை செய்து சாப்பிடுவார்கள். அத்தகைய பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கேரளா மட்டை அரிசி பால் பாயாசம். இது கேரளாவில் மிகவும் ஸ்பெஷலானது.
கேரளா மட்டை அரிசி என்பது வேறொன்றும் இல்லை கேரளா அரிசி தான். இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இந்த பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். இந்த கேரளா மட்டை அரிசியைக் கொண்டு பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். முக்கியமாக இதை ட்ரை செய்த பின்னர் எப்படி இருந்தது என்று உங்களின் அனுபவத்தை எங்களுடன் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரளா மட்டை அரிசி – 1/8 கப்
* பால் – 4 கப்
* சர்க்கரை – 1 கப்
* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
* உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
* முதலில் கேரளா மட்டை அரிசியை மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.
* பின் அதை நீரில் நன்கு கழுவி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.
* அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
* இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்…
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .