நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காஷ்மீரி தம் ஆலு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
காஷ்மீரி தம் ஆலு என்பது ஒரு பிரபலமான காஷ்மீரி ரெசிபி. இந்த ரெசிபிக்கு வழக்கமான உருளைக்கிழங்கையோ அல்லது பேபி உருளைக்கிழங்குகளையோ பயன்படுத்தலாம். இந்த காஷ்மீரி தம் ஆலு ரெசிபியை நீங்கள் இதுவரை ரெஸ்டாரண்ட்டுகளில் சுவைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இந்த காஷ்மீரி தம் ஆலு ரொட்டி, நாண், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு/ஆலு – 4
* தயிர் – 1 கப்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* சுக்கு பவுடர் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* சோம்பு பவுடர் – 2 டீஸ்பூன்
* மைதா – 2 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு – 3
* கருப்பு ஏலக்காய் – 2
* பச்சை ஏலக்காய் – 2
* மிளகு – 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை – 1
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – தேவையான அளவு
* கொத்தமல்லி – சிறிது
* நெய் – 1 டீஸ்பூன்
* கறித்துண்டு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்குகளை தோலுரித்துவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை உப்பு நீரில் போட்டு அடுப்பில் வைத்து, உருளைக்கிழங்கை வேக வைத்து இறக்கி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த உருளைக்கிழங்குகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் மசாலா பொடிகள், மைதா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தயிர் கலவையை ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் நீரை சிறிது ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் மூடி வைத்து 5 முதல் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு கறித்துண்டை நெருப்பில் வைத்து 5 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதே சமயம் ஒரு அலுமினியத்தாளை கப் போன்ற வடிவில் தயாரித்து, கிரேவியின் மேல் வைத்து, சூடேறிய கறித்துண்டை அதில் வைத்து, அந்த கறித்துண்டின் மேல் நெய் ஊற்றி, 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து கிரேவியில் உள்ள கறித்துண்டை நீக்கிவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், காஷ்மீரி தம் ஆலு தயார்.
இந்த பதிவின் மூலமாக ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காஷ்மீரி தம் ஆலு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காஷ்மீரி தம் ஆலு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…