நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கரும்புச்சாறு பொங்கல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மார்கெட்டில் எங்கு பார்த்தாலும் கரும்பை காணலாம். நீங்கள் கரும்பு பிரியர் என்றால், கரும்பைக் கொண்டு வித்தியாசமான ரெசிபிக்களைத் தயாரித்து சாப்பிட விரும்பினால், பொங்கல் ஸ்பெஷலாக கரும்புச்சாறு பொங்கல் செய்து சாப்பிடுங்கள். இந்த கரும்புச்சாறு பொங்கல் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குக்கரில் செய்துவிடலாம் என்பதால் மாலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி – 1/4 கப்
* பாசிப்பருப்பு – 1/8 கப்
* கரும்புச்சாறு – 1 1/2 கப்
* வெல்லம் – 1/8 கப்
* நெய் – 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – சிறிது
* உலர் திராட்சை – சிறிது
* ஏலக்காய் பொடி – சிறிது
செய்முறை:
* முதலில் கரும்பின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதுப்போன்று 1 1/2 கப் அளவு கரும்பு சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் கழுவிய அரிசி மற்றும் கரும்பு சாற்றினை எடுத்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி குறைவான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கரண்டியால் கிளறிவிட்டு வெல்லத்தை நன்கு கரைய வைக்க வேண்டும்.
* அதன் பின் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சையைப் போட்டு வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.
குறிப்பு:
* வேண்டுமானால் ப்ளேவருக்கு இதில் பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* நீங்கள் பயன்படுத்தும் பச்சரிக்கு ஏற்றவாறு விசில் விட்டுக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக கரும்புச்சாறு பொங்கல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கரும்புச்சாறு பொங்கல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .