நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சத்தான… கார்த்திகை பொரி உருண்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
விழாக்காலங்களில் நெல் பொரி வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாளன்று விளக்கு ஏற்றி வழிபடுவதோடு நெல்பொரி இனிப்பு உருண்டை செய்து வழிபடுவது ஐதீகமாகும். கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், தீப்பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.
பொரியுடன் சக்கரைப் பாகு சேர்த்து பிடிக்குற இந்த பொரி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் வாதம், கபம் தொடர்பான நோய்கள் நீங்கும், வாந்தி பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை திருநாளில் நெல் பொரி, அவல் பொரியோடு வெல்லம், தேங்காய் கலந்து உருண்டை பிடித்து இறைவனுக்கும், கார்த்திகை தீபங்களுக்கும் படைத்து வழிபடுவார்கள். அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம்.
பொரியை சாதாரணமாய் நினைத்து விட வேண்டாம் நெருப்பில் வெந்து தன்னை பெரிதாக்கி கொள்ளும் பொரி சத்துள்ள உணவில் தனித்துவம் பெற்றது. இப்போது சத்தான கார்த்திகை பொரி உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
*பொரி – 500 கிராம்
* வெல்லம் – 1 கப் ( நன்றாக பொடித்தது)
* ஏலக்காய் – 3
* தேங்காய் – சிறிதாக நறுக்கியது அரை கப்
* தண்ணீர் – அரை கப்
* வேர்க்கடலை – அரை கப்
செய்முறை:
* வெல்லத்தை பாகு காய்ச்சவும். ஏலாக்காயை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் பொரியை கொட்டி, அதில் வேர்க்கடலை, தேங்காய், ஏலக்காய் சேர்க்கவும். காய்ச்சிய பாகுவை மெதுவாக இந்த கலவையில் ஊற்றி கிளறவும்.
* வெது வெதுப்பாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அரை மணி நேரத்தில் இந்த பொரி உருண்டை செய்து விடலாம். பொரி உருண்டையை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நமத்து போகாது.
* கார்த்திகை தீபம் நாளில் வெல்லத்தில் செய்த உணவுப் பொருள் முக்கியமாக செய்யப்படுகிறது. பொரி உருண்டை போல, கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை, அப்பம், பாயசம், வடை செய்து படையலிட்டு சாப்பிடலாம்.
குறிப்பு
* நெல் பொரி உருண்டை செய்வதற்கு முன் வெறும் வாணலியைச் சூடேற்றி அதில் ஒருமுறை பொரியைப் புரட்டி எடுத்துச் செய்வதால், விரைவில் நமுத்துப் போகாது.
* பொரி இருக்கிறதோ அதே அளவு வெல்லம் இருக்க வேண்டும். நெல் பொரி உருண்டை பிடிக்கும் போது பாகைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சேர்க்க வேண்டும். பொரியுடன் வேர்க்கடலை, முந்திரி, தேங்காய்ச் சில்லு போன்றவற்றைக் கலந்து உருண்டை பிடிக்கலாம். உருண்டை பிடிக்கும்போது கையில் சூடு பொறுத்துக்கொள்ள அரிசிமாவு அல்லது நெய் தொட்டுக்கொண்டு பிடிக்கலாம்.
இந்த பதிவின் மூலமாக சத்தான… கார்த்திகை பொரி உருண்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சத்தான… கார்த்திகை பொரி உருண்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…