நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காராமணி பொரியல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பொரியல் இல்லாமல் சிலருக்கு சாப்பாடே இறங்காது.
தேவையான பொருட்கள்:
* காராமணி – 300 கிராம்
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 2
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் காராமணியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் பொடியாக நறுக்கிய காராமணி பீன்ஸ் சேர்த்து, உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, குக்கரில் உள்ள காராமணி மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சில நொடிகள் நன்கு கிளறிவிடுங்கள்.
* பின்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காராமணி பொரியல் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக காராமணி பொரியல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காராமணி பொரியல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…