நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தமிழ்நாட்டில் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க மாசி மாதத்தின் இறுதியும், பங்குனி மாதத்தின் முதல் தேதியிலும் சாவித்திரி நோன்பு என்னும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பின் போது பெண்கள் நெய்வேத்தியத்திற்காக காரம் அல்லது இனிப்பு அடையை செய்வது வழக்கம். இந்த வருட காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.
நீங்கள் காரடையான் நோன்பு மேற்கொள்பவராக இருந்தால், அந்நாளில் விஷேசமாக செய்யப்படும் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே காரடையான் நோன்பு இனிப்பு அடை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து நெய்வேத்தியம் செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி மாவு – 1 கப்
* வெல்லம் – 1 கப்
* தண்ணீர் – 2 கப்
* பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 4 டேபிள் ஸ்பூன்
* காராமணி – 1 /4 கப்
* ஏலக்காய் – 1 (பொடித்து கொள்ளவும்)
செய்முறை:
* முதலில் காராமணியை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, விசில் விட்டு வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் மற்றும் வெல்லத்தைப் போட்டு, வெல்லத்தைக் கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
* பிறகு தீயை குறைத்துவிட்டு, அதில் அரிசி மாவை மெதுவாக கட்டிகள் சேராதவாறு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு குளிர்ந்ததும் கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது அந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக தட்டி, நடுவே ஒரு ஓட்டை போட்டால், சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை தயார்.
Image Courtesy: subbuskitchen
இந்த பதிவின் மூலமாக காரடையான் நோன்பு இனிப்பு அடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காரடையான் நோன்பு இனிப்பு அடை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .