சைவம்

Kala chana Masala Recipe | பண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

விரதங்களின் போது மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்த சமயங்களில் நிறைய ஸ்பெஷல் உணவுகளையும் தயாரித்து கடவுளுக்கு படைத்து மகிழ்வார்கள். அஷ்டமி பூஜை செய்து அஷ்டமிக்கு பிரசாதத்தை படைப்பார்கள். எனவே நவராத்திரி என்றாலே அதன் ஸ்பெஷல் ரெசிபிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிலும் இந்த கருப்பு கொண்டைக்கடலை ரெசிபி நவராத்திரிக்கென்றே செய்யக் கூடிய ஒன்று. அப்படியே அதில் சேர்க்கப்படும் நெய்யின் மணமும் வாசனையும் நம் நாவை எச்சு ஊறச் செய்து விடும். விரத ரெசிபி என்பதால் ராக் சால்ட் மட்டும் சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்யப்படுகிறது. புரோட்டீன், தாதுக்கள் அடங்கிய இந்த ரெசிபி நமது உடலுக்கும் நல்லது.

சரி வாங்க இப்பொழுது இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்

Recipe By: அங்கிதா மிஸ்ரா

Recipe Type: சைடிஸ்

Serves: 2

கரம் மசாலா தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

ராக் சால்ட் – 1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

கருப்பு கொண்டைக்கடலை – 2 கப்

மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

கருப்பு கொண்டைக்கடலையை இரவிலே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.

இப்பொழுது வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்

இப்பொழுது ராக் சால்ட், சீரகப் பொடி, இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

பிறகு மூடியை கொண்டு மூடி 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்

கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கறி நன்றான கெட்டிப் பதம் வரை சமைக்கவும்

தண்ணீர் வற்றிய பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்

இதை ஒரு பெளலிற்கு மாற்றி பூரியுடன் பரிமாறுங்கள்.

சுவையான கருப்பு கொண்டைக்கடலை மசாலா ரெடி

இந்த பதிவின் மூலமாக பண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment