நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இந்திய டிசர்ட் வகைகள் எல்லாருக்கும் விருப்பமான விருந்தாக உள்ளது. எல்லாரும் இதை மனதார விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த டிசர்ட் வகையான உணவை தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு அடிப்படையான பொருள்கள் என்று பார்த்தால் பால் பொருட்கள் மட்டுமே.
ரெம்ப வருடங்களாக ஆராய்ச்சி செய்து நமது செஃப் ஒரு வித்தியாசமான டேஸ்டியான ஹாஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக்கை தயாரித்து உள்ளனர். இந்த டிசர்ட்டில் ராப்ரி ரெசிபி அடங்கியது தான் இதன் முக்கியமான சிறப்பாக உள்ளது.
இது கண்டிப்பாக எல்லார் மனதையையும் கொள்ளை அடித்து விடும். அது மட்டுமா சாப்பிட சாப்பிட தெகட்டாத ஒரு உணவாகவும் இது இருக்கும். இதன் சுவையில் மெய் மறந்து போவீர்கள். இதை வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு இதன் சுவை உங்களை ஈர்த்து விடும்.
சரி வாங்க இந்த காஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக்கை நம்ம செஃப் விஷால் அட்ரியா எப்படி செய்கிறார் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
Recipe By: செஃப் விஷால் அட்ரியா மற்றும் செஃப் ஜேடபிள்யூ மாரிடேட்
Recipe Type: டிசர்ட்
Serves: 5
காஜூ கத்லி – 7-10 துண்டுகள்
க்ரீம் சீஸ் – 1 கப்
ராப்ரி – 1 கப்
சர்க்கரை – 1 கப்
முட்டை – 4
ஏலக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
நன்றாக அடித்த க்ரீம்- (அலங்கரிக்க)
ஒரு கேக் செய்யும் ஸ்பிரிங் பாட்டம் அச்சு பாத்திரத்தை எடுத்து அதில் சில்வர் தகடு பேப்பரை விரித்து அதன் மேல் சீஸ் கேக்கை வைக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு ஸ்ட்ரேயை எடுத்து அதில் சீஸ் கேக் வைக்கப்பட்ட அச்சு பாத்திரத்தை வைக்கவும்.
ஒரு தட்டு முழுவதும் காஜூ கத்லியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது காஜூ கத்லியை சீஸ் கேக்கின் மேல் வரிசையாக வைக்க வேண்டும்.
ஒரு பெளலில் சீஸ் க்ரீமை எடுத்து கொள்ளவும்
அதனுடன் ராப்ரியை சேர்க்கவும்
அதனுடன் முட்டை, சர்க்கரை, மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்க்கவும்
இப்பொழுது அதனுடன் மைதா மாவை சேர்க்கவும். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்
இந்த க்ரீம் உள்ள கலவையை ட்ரேயின் மீது உள்ள காஜூ கத்லி மீது ஊற்றவும்.
இப்பொழுது அந்த ஸ்ட்ரேயில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கேக்கை 150 டிகிரி செல்சியஸ் அளவில் ஒரு மணி நேரத்திற்கு ஓவனில் வைத்து பேக் பண்ண வேண்டும்.
பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஓவனிலிருந்து எடுக்க வேண்டும்
அறை வெப்பநிலை வரும் வரை வெளியில் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு அந்த கேக் அமைப்பை 2-3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும்
பிறகு பிரிட்ஜிலிருந்து எடுக்கவும்
பிறகு கேக்கை மட்டும் அச்சுப் பாத்திரத்தில் இருந்து தனியாக எடுத்து துண்டுகளாக வெட்டவும்.
பிறகு கேக் துண்டுகளை ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.
ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
சுவையான காஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக் ரெடி
இந்த பதிவின் மூலமாக கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .