Categories: சைவம்

Kaima Idli Recipe In Tamil | Kaima idli recipe : கைமா இட்லி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Kaima idli recipe : கைமா இட்லி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் காலையில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அந்த இட்லியை கொண்டு இதுவரை நீங்கள் இட்லி உப்புமா செய்திருப்பீர்கள். ஆனால்

தேவையான பொருட்கள்:

* இட்லி – 5

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* பச்சை பட்டாணி – 1/4 கப் (வேக வைத்தது)

* குடைமிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் இட்லியை துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து, தேவையான அளவு உப்பைத் தூவி நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் குடைமிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வேக வைத்துள்ள பச்சை பட்டாணி சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இட்லித் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், கைமா இட்லி தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக Kaima idli recipe : கைமா இட்லி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Kaima idli recipe : கைமா இட்லி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago