நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Jeeraga Kuzhambu Recipe : சீரக குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது.
தேவையான பொருட்கள்:
* புளி – 1 எலுமிச்சை அளவு
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* பூண்டு – 6 பல்
* சாம்பார் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வரமிளகாய் – 2
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து நன்கு பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் சாம்பார் பவுடர் சேர்த்து நன்கு கிளறி, புளி சாற்றினை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பில் இருந்து பச்சை வாசனை போனதும், அரைத்த சீரக பொடியைத் தூவி கிளறி, மீண்டும் ஒரு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சீரக குழம்பு தயார்.
Image Courtesy: subbuskitchen
இந்த பதிவின் மூலமாக Jeeraga Kuzhambu Recipe : சீரக குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Jeeraga Kuzhambu Recipe : சீரக குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .