Categories: சைவம்

Jalebi Recipe | ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி?

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஜிலேபி என்பது வட இந்தியர்களின் முக்கிய இனிப்பு வகையாக இருந்தால் கூட இதன் சுவையால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த இனிப்பு வகை பொதுவாக பண்டிகைகளின் போதும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தயாரித்து மகிழ்வர். இது மிகவும் மொறுமொறுப்பாக மென்மையாக இருப்பதோடு வாயில் போட்டதும் அப்படியே ஜூஸியாக உருகக் கூடியதாகவும் உள்ளது. இதை சர்க்கரை பாகுவில் ஊற வைப்பதால் இந்த ஜூஸின் தன்மை இதுக்கு கிடைக்கிறது.

கடைகளில் விற்பனைக்காக செய்யப்படுகின்ற ஜிலேபி ரெசிபியை பார்த்தால் குறைந்தது 6-8மணி நேரமாவது ஆகும். ஆனால் உடனடியாக வீட்டிலேயே ஜிலேபி செய்வதை எப்படி என்பதைத் தான் நாம் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

இந்த வீட்டிலேயே தயாரிக்கும் ரெசிபியும்
இந்த ஜிலேபி ரெசிபி ரெம்ப சுவையான எளிதான ரெசிபி ஆகும். இதற்கு நீங்கள் சர்க்கரை பாகுவை சரியான பதத்தில் காய்ச்சினாலே போதும் பாதி வேலை முடிந்து விடும். சரி வாங்க இப்பொழுது குழந்தைகளுக்கும் பிடித்தமான இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 10-12 ஜிலேபி

மைதா – 1 கப்

கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் – 1 கப்

சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – 4 கப்கள்

குங்குமப் பூ – 4-5

பழ உப்பு – தேவைக்கேற்ப

குங்குமப் பூ கலர் பொடி – கொஞ்சம்

நெய் – 1 கப்

1. மைதா மாவை கலக்குவதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும் .

2. அதனுடன் கடலை மாவு மற்றும் தயிர் சேர்க்கவும் .

3. நன்றாக தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலக்கவும். மாவானது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.

4. இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

5. அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

6. அதனுடன் உடனடியாக தண்ணீர் ஊற்றி கருகுவதை தவிர்க்கவும்.

7. சர்க்கரை முழுவதும் கரையும் வரை காய்ச்சி 3-5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

8. குங்குமப் பூ மற்றும் கலர் பொடியை அதனுடன் சேர்க்கவும்.

9. மிதமான தீயில் நன்றாக கிளறி இறக்கி ஓரமாக வைத்து விடவும் .

10. இப்பொழுது கலந்து வைத்துள்ள மாவை எடுத்து அதில் பழ உப்பு சேர்த்து கலக்கியை கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்.

11. ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அதன் மூடியை திறந்து கொண்டு அதன் மேல் ஒரு புனலை வைக்க வேண்டும்.

12. அந்த புனலின் வழியாக மாவை செலுத்த வேண்டும். பிறகு ஒரு துளையிட்ட மூடியால் மூடி விட வேண்டும்.

13. இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நெய் ஊற்றி உருகியதும் ஒரு 1-2 நிமிடங்கள் சூடாக வேண்டும்.

14. இப்பொழுது துளையிட்ட டப்பாவை மேலே பிடித்து கொண்டு சூடான நெய்யில் மாவை பிழிய வேண்டும்.

15. சுத்து முறுக்கு வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் தள்ளி தள்ளி பிழிய வேண்டும்.

16. இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை கவனமாக திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்.

17. இந்த செய்முறை முடிந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.

18. பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகுவில் 30 விநாடிகள் ஊற வைக்க வேண்டும்.

19. பிறகு அதை எடுத்து வைத்து சர்க்கரை பாகு சொட்ட சொட்ட பரிமாறுங்கள்.

இந்த பதிவின் மூலமாக ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago