நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் பொங்கல் பண்டிகையன்று பொங்கல் செய்வதற்கு பொருட்களை வாங்க ஆரம்பித்திருப்பார்கள். சிலர் பாரம்பரிய முறையில் வீட்டிற்கு வெளியே மண்பானையில் பொங்கலை வைப்பார்கள். ஆனால் நகர்புறங்களில் இருப்பவர்களுக்கு அப்படியான சூழ்நிலை இல்லாததால், குக்கரில் பொங்கலை வைப்பார்கள். நீங்களும் குக்கரில் பொங்கல் வைப்பவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் பொதுவாக ஐயங்கார் சமையல் மிகவும் ருசியாக இருக்கும்.
அதிலும் அவர்கள் செய்யும் பொங்கல் அட்டகாசமாக இருக்கும். அந்த மாதிரியான பொங்கலை செய்ய வேண்டுமானால், கீழே ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து, பொங்கல் அன்று செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி – 1/2 கப்
* பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* கொதிக்க வைத்த பால் – 1 கப்
* தண்ணீர் – 1 1/2 கப்
* வெல்லம் – ஒரு கப் (பொடியாக தட்டியது)
* தண்ணீர் – 1/2 கப் (வெல்லத்தை பாகுவாக்க)
* நெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – சிறிது
* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
* பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாசிப்பருப்பைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
* பின் அதில் பச்சரிசியை சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் வறுத்து, இறக்கிக் கொள்ளவும். பின்பு அதை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
* பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, கழுவிய அரிசியுடன் பால் மற்றும் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி மற்றும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் அதில் கொதிக்க வைத்துள்ள பால் அல்லது நீரை வேண்டுமானால் சிறிது ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, நீரை ஊற்றி, பாகு தயாரித்துக் கொள்ளவும்.
* பின் அந்த பாகுவை குக்கரில் உள்ள அரிசியில் வடிகட்டி ஊற்றி அடுப்பில் வைக்கவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், இந்நிலையில் சூடான பால் அல்லது நீரை ஊற்றி, அடிபிடிக்காமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இல்லாமல், ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போதே, அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிவிடுங்கள்.
* இப்போது ஒரு சிறிய வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியைப் போட்டு வறுத்து, பொங்கலுடன் சேர்த்து , அதன் மேல் சிறிது ஏலக்காய் பவுடர், பச்சை கற்பூரம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயார்.
IMAGE COURTESY: chitrasfoodbook
இந்த பதிவின் மூலமாக ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…