Categories: சைவம்

Channa Kurma Recipe | ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு வாய்க்கு ருசியான சைடு டிஷ் செய்து வீட்டில் உள்ளோரை அசத்த விரும்புகிறீர்களா? அப்படியானால் அனைவரும் விரும்பி சாப்பிடும் சன்னா குருமாவை செய்யுங்கள். அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் சன்னா குருமாவை செய்ய வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து சுவைத்து மகிழுங்கள். இந்த சன்னா குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* சன்னா/கொண்டைக்கடலை – 1 கப்

* வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1/2 கப் (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 1

* ஏலக்காய் – 1

* அன்னாசிப்பூ – 1

* கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

* தேங்காய் – 1/2 கப்

* இஞ்சி – 1/2 இன்ச்

* ஏலக்காய் – 1

* பட்டை – 1/4 இன்ச்

* கிராம்பு – 1

* பூண்டு – 1 பல்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* மிளகு – 10

* பச்சை மிளகாய் – 1

* முந்திரி – 10

செய்முறை:

* முதலில் சன்னாவை சுடுநீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு போதுமான அளவு நீரை ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அத்துடன் சிறிது வேக வைத்துள்ள சன்னாவை போட்டு, பேஸ்ட் போல் மென்மையாக நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

* பின் அதில் வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.

* பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* குருமாவின் மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, குருமாவின் மேலே கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா ரெடி!

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago