நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான உங்கள் நாவை ஊறச் செய்யும் மொறுமொறுப்பான பீர்க்கங்காய் பஜ்ஜி!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பீர்க்கங்காய் பஜ்ஜி பொதுவாக தென்னிந்தியாவில் விரும்பி செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகும். இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி என்பது அதிகமான சத்துக்கள் அடங்கிய பீர்க்கங்காயை கலர்புல்லான கடலை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு மொறு மொறுவென பொரித்தெடுத்து பரிமாறும் ரெசிபி ஆகும்.
இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி உங்கள் மாலை நேர தேநீர் வேளையை கண்டிப்பாக சுவை மிகுந்ததாக மாற்றக் கூடியது. அதுவும் குறிப்பாக மழைக்காலத்தில் அந்த சில்லென்ற பருவ காலத்தில் ஒரு கப் தேநீருடன் இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் போதும் ஒரு இனிமையான விருந்து கிடைக்கும். இதன் மேல் பூசப்பட்டிருக்கும் கடலை மாவின் மொறு மொறுப்பான தன்மையும் உள்ளே பீர்க்கங்காயின் மென்மையான தன்மையும் காரசாரமான சுவையும் உங்கள் நாக்கில் எச்சு ஊற வைத்து விடும்.
பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள்.
தீடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி செய்து அசத்திடலாம். ஏனெனில் இது செய்வதற்கு மிகவும் விரைவான எளிதான ரெசிபி ஆகும். மேலும் இது குழந்தைகளுக்கும் ரெம்ப பிடித்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். சரி வாங்க இப்பொழுது இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
Recipe By: காவ்யா ஸ்ரீ
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 4 பேர்கள்
பீர்க்கங்காய் (பீர்க்கங்காய்) – 1/2
கடலை மாவு – 1/2 பெளல்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு
தண்ணீர் – 1 கப்
1. பீர்க்கங்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இப்பொழுது ஒரு துண்டுப் பகுதியை மட்டும் எடுத்து தோலை உரிக்கவும்.
2. தோலுரித்த பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. ஒரு பெளலில் கடலை மாவை எடுத்து கொள்ளவும்.
4. அதனுடன் மஞ்சள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
5. அதனுடன் மேலும் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
6. பிறகு உப்பு சேர்த்து கலவையை நன்றாக கலக்கவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
8. 1-2 நிமிடங்கள் வரை எண்ணெய் நன்றாக சுடும் வரை காத்திருக்க வேண்டும்.
9. பிறகு எண்ணெய்யை கடலை மாவு கலவையில் ஊற்ற வேண்டும்.
10. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கடலை மாவு பேட்டரை சரியான பதத்தில் தயாரிக்க வேண்டும்.
11. இப்பொழுது பொரிப்பதற்கு எண்ணெய்யை கடாயில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
12. நறுக்கிய பீர்க்கங்காயை இந்த பேட்டரில் நன்றாக முக்கி எடுக்க வேண்டும்.
13. ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
14. பஜ்ஜி பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
15. இப்பொழுது பஜ்ஜியை எண்ணெய்யிலிருந்து எடுத்து நன்றாக எண்ணெய்யை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
16. சூடான மொறு மொறுப்பான காரசாரமான பஜ்ஜி ரெடி

இந்த பதிவின் மூலமாக உங்கள் நாவை ஊறச் செய்யும் மொறுமொறுப்பான பீர்க்கங்காய் பஜ்ஜி!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி உங்கள் நாவை ஊறச் செய்யும் மொறுமொறுப்பான பீர்க்கங்காய் பஜ்ஜி!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .