Pattukkottai: பட்டுக்கோட்டையில் பல நாட்களா வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று (9.0.2017, செவ்வாய் கிழமை) மாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இந்த கனமழையால் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களில் ஊர் மக்கள் மற்றும் அரசு உதவியுடன் குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரி குளங்கள் அனைத்த்தும் ஆளப்படுத்தினர். நேற்று பெய்த கனமழையால் ஓரளவு குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது போன்று மழை நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி மழை நீரை குளம், குட்டை, ஏரிகளில் சேமிக்கப்பட்ட வேண்டும். இதற்கு வாய்க்கால் வசதிகள், தண்ணீர் போகும் வழிகள் சரியான விதத்தில் இருக்கவேண்டும். இதை அரசாங்கத்தின் கவனத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கொண்டு செல்லவேண்டும். மழைநீரை சேமிப்பதன் மூலம் மக்கள் நலம் பெறுவதோடு விவசாயமும் மேம்படுத்தப்படும். இயற்கையை காப்பாற்ற, நீர் நிலையை மேம்படுத்த கைகோர்ப்போம்…
நன்றி… மகிழ்ச்சி…