சைவம்

Gulab Jamun Kofta Gravy Recipe In Tamil | குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி

gulab jamun kofta curry
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி (Gulab Jamun Kofta Curry ) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் குலாப் ஜாமூன் மிக்ஸ் இருக்கும். பொதுவாக குலாப் ஜாமூன் மிக்ஸைக் கொண்டு இனிப்பான குலாப் ஜாமூனைத் தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் குலாப் ஜாமூன் மிக்ஸைக் கொண்டு சப்பாத்திக்கு சுவையான ஒரு கிரேவி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த கிரேவிக்கு பெயர் தான் குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி.

தேவையான பொருட்கள்:

கோப்தாவிற்கு…

* ஜாமூன் மிக்ஸ் – 1 1/2 கப்

* துருவிய கேரட் – 1/4 கப்

* பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

கிரேவிக்கு…

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* முந்திரி – 5

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 3/4 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்

* பால் – 1/3 கப்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

Gulab Jamun Kofta Curry செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், தக்காளி, முந்திரி போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும், குக்கரில் உள்ளதை குளிர வைத்து, மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.

* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வாக்கி, பின் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து குறைவான தீயில் வேக வைக்கவும்.

* பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

* அதன் பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிடவும்.

* அடுத்ததாக ஒரு பௌலில் குலாப் ஜாமூன் மிக்ஸ், துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை பிரட்டி விட வேண்டும்.

* பின் சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் அந்த உண்டையை தயாரித்து வைத்துள்ள கிரேவியில் போட்டு, ஒரு 5 நிமிடம் ஊற வைத்து, பின் சப்பாத்தியுடன் பரிமாறினால், குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி தயார்.

இந்த பதிவின் மூலமாக குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment