சைவம்

Ginger Kuzhambu Recipe In Tamil | இஞ்சி குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான இஞ்சி குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இஞ்சி மருத்துவ குணம் நிறைந்தது. இஞ்சியை பொதுவாக சமையலில் அளவாக சேர்ப்போம். ஆனால் அந்த இஞ்சியைக் கொண்டு குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இஞ்சி குழம்பு சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இஞ்சி குழம்பு சாப்பிடுவது நல்லது. உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், அவ்வப்போது இஞ்சி குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* கறிவேப்பிலை – சிறிது

* புளி – 1 எலுமிச்சை அளவு

* தண்ணீர் – 1 1/2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெல்லம்/சர்க்கரை – 2 டீஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பன்

* வரமிளகாய் – 4-

* கறிவேப்பிலை – 1 கையளவு

* இஞ்சி – 4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை பிசைந்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றா சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்

* அதன் பின் அரைத்த மசாலாவை ஊற்றி, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

* பிறகு புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், இஞ்சி குழம்பு தயார்.

இந்த பதிவின் மூலமாக இஞ்சி குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி இஞ்சி குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment