2014 FIFA World Cup Brazil: பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று அமெரிக்கா- கானா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கானாவுக்கு எதிராக அமெரிக்க கேப்டன் கிளைன்ட் டெம்சே ஆட்டத்தின் முதல் 29 வினாடியில் கோல் அடித்தார். உலக கோப்பையில் இது 5வது துரித கோல் ஆகும்.
முன்னதாக துருக்கியின் ஹகான் சுகூர் 2002ம் ஆண்டு உலக கோப்பைபோட்டியில் தென்கொரிய அணிக்கு எதிராக 11வது வினாடியில் கோல் அடித்ததுதான் உலகின் வேகமாக கோலாகும். முதலிலேயே அமெரிக்கா கோல் போட்டாலும், சுதாரித்துக்கொண்ட கானா, 82வது நிமிடத்தில் ஒரு கோல்போட்டு சமன் செய்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அமெரிக்காவின் ஜான் ப்ரூக்ஸ் ஒரு கோல் போட்டு கானாவின் கனவை தகர்த்தார். முதல் மற்றும் கடைசி நிமிடங்கள்தான் கானாவுக்கு எதிராக மாறின என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு உலக கோப்பைகளிலும் கானாவிடம் தோல்வியடைந்திருந்த அமெரிக்கா அதற்கு இந்த போட்டியின் மூலம் பழி தீர்த்துக்கொண்டது.