Categories: சைவம்

Ganesh Chaturthi Special Banana Sugar Kolukattai | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை வந்துவிட்டது. அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகளை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமான கொழுக்கட்டையை செய்ய விரும்பினால், இக்கட்டுரை உங்களுக்கானது. பொதுவாக கொழுக்கட்டையிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தால் உள்ளே வைக்கும் பூர்ணமாகத் தான் இருக்கும்.

ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் கொழுக்கட்டையோ வித்தியாசமானது. அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தைக் கொண்டு செய்யக்கூடியது. நிச்சயம் இதுநாள் வரை இப்படிப்பட்ட கொழுக்கட்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்க நினைத்தால், இந்த வாழைப்பழ கொழுக்கட்டையை செய்து படையுங்கள்.

MOST READ: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபிக்கள்!

சரி, வாருங்கள் இப்போது அந்த வாழைப்பழ கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

* இடியாப்ப மாவு – 1 கப்

* கனிந்த வாழைப்பழம் – 1

* சர்க்கரை – 1/2 கப்

* தண்ணீர் – 3/4 கப்

* ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்

* நெய் – தேவையான அளவு

செய்முறை:

* ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் கனிந்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதுவும் மாவு நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* பிறகு மாவை நன்கு குளிர வைக்க வேண்டும்.

* அடுத்ததாக குளிர வைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி நன்கு சூடான பின் இட்லி தட்டை வைத்து மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி!

இந்த பதிவின் மூலமாக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago