நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஏனெனில் விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் பிடிக்கும். ஆனால் கொழுக்கட்டைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. நீங்கள் வழக்கம் போல் செய்யப்படும் கொழுக்கட்டையை செய்ய விரும்பாமல், வித்தியாசமான கொழுக்கட்டை செய்ய விரும்பினால், அம்மினி கொழுக்கட்டை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:
மாவிற்கு…
* இடியாப்ப மாவு – 1/2 கப்
* நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
* வரமிளகாய் – 2
* துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு பௌலில் இடியாப்ப மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் நீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த சூடான நீரை இடியாப்ப மாவில் ஊற்றி, கரண்டி பயன்படுத்தி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதை தட்டால் ஒரு 5 நிமிடம் மூடி வைத்து குளிர வைக்க வேண்டும். பின் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மூடியைத் திறந்து, கையால் மாவை நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
* பிறகு இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* பின் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து பத்து நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்
* பின் இட்லி தட்டில் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை கடாயில் போட்டு ஒருமுறை கிளறி, மேலே துருவிய தேங்காயை சேர்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், அம்மினி கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…